சில கருத்துகள்......
பன்னிரண்டாம் வகுப்புப் பொத்துத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்க,அதைப் பற்றிப் பல சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்க,கல்வித்துறையைப் பற்றி ஏதாவது எழுதுவோமே என மனம் அறிவுறுத்தியதன் பலனாய்......
முதலில் பள்ளிக் கல்வியைப் பற்றி அலசுவோம்…..
என் பள்ளி வாழ்க்கையில் கவனித்த ஒரு விஷயம் Partialism.இந்த Partialism இல்லாத பள்ளிகளே இல்லை எனக் கூறலாம். ஏதாவது ஒரு பள்ளியில் படிக்கும், ஒரு சுமரான மார்க் வாங்கும் மாணவனை கேட்டுப் பாருங்கள்…. அவன் வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவன் மீது எல்லா ஆசிரியர்களும் பாசத்தை பொழியும் விஷயத்தை (மிகவும் emotional ஆக) விளக்குவான் (என்னிடம் ஒரு வருடத்திற்கு முன் கேட்டிருந்தால் நானும் சொல்லியிருப்பேன்!). தான் நடத்தும் பாடங்களை அக்கறையாக கவனித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் மீது தனி கரிசனம் காட்டும் ஆசிரியர்கள் ஒரு வகையில் தவறிழைக்கவில்லை என மனம் வாதாடினாலும்,பல வகையில் தவறு இழைக்கிறார்கள் என மூளை குற்றம் சாட்டுகிறது.அதன் வாதத்தை கேட்போம்....
படிக்கும் மாணவனை ஊக்குவித்துக்கொண்டே இருப்பதால்,படிக்காதவர்கள், "தங்களுக்கு இனி படிப்பே வராது" என முடிவுக்கு வந்து விட நேர்கிறது.தன்னைப்போல சிந்தனை உள்ளவர்கள் ( நிறைய பேர் இருப்பார்கள்) சிலரை கூடிக்கொண்டு கும்பல் சேர்க்கத்தொடங்குவார்கள்.ஒரு Gang form ஆகிறது. பெண்களை சைட் அடிப்பது , அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வது , சில கை கலப்புகள்…. என இந்த குழு மெல்ல ‘தழைத்தோங்கத்’ தொடங்கும் . பிற்காலங்களில் அவர்களும் உருப்பட மாட்டார்கள்,அவர்களை சுற்றி இருப்பவர்களையும் உருப்பட விட மட்டார்கள் (இல்லன்னா அரசியல்ல குதிச்சுடுவாங்க..அதுதானே சொல்ல வர்றீங்க?) .இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ...என இழுக்க விரும்பவில்லை. நாம் பொது இடங்களில் சந்திக்கும் சில கும்பல்கள் (“பாத்தாலே பத்திண்டு வர்றது” என உங்கள் Girl Friendஓ உடன்பிறந்தவளோ கூறுவாளே... ) இத்தகைய Partialisஅப்பேயினால் பாதிக்கப்பட்டவர்களாய் இருக்கக்கூடும். அந்த நன்றாய் படித்த மாணவர்கள் States இலோ London இலோ AC அறையில் Computerஐ தட்டிக் கொண்டிருக்க ,சம்பந்தப்பட்ட ஆசிரியை Tuition சொல்லித் தந்து கொண்டே "செல்வி" பார்துக்கொண்டிருக்க , இரு தரப்புக்கும் தெரியாது தங்களால் ஒரு தேச விரோத சக்தி உருவாகிக்கொண்டிருக்கிறது என ! ‘அந்நியன்’ படத்தில் நம்ம தல சுஜாதா வசனத்திற்கு குரல் கொடுக்கும் விக்ரம் கூறுவதைப் போல் தப்பு Small ஆய் இருப்பினும் விளைவு XL ஆய் மாறிவிட்டது பார்த்தீர்களா?. மனது குறுக்கிட்டு "ஆயினும் இந்த Partialisஅத்தினால் பலர் பாதிக்கப்படுவதில்லையே! சில படிப்ஸுகளை (கல்லூரியில் கற்றுக்கொண்ட வார்த்தை) தூக்கி கொஞ்சும் ஆசிரியர்கள் சிலரை ரொம்ப ரொம்ப இடித்துரைப்பர். அத்தகைய மாணவரே இதனால் பாதிக்கப்படுகிறார்கள்."எனக் கூறுகிறது. தீர்ப்பை தள்ளிப்போட்டுவிட்டு (ஹை கோர்டின் சில சூட்சுமங்களை நாமும் கொஞ்சம் பயன் படுத்த வேண்டாமா?)
பள்ளிக் கல்வியின் தரத்தைப் பற்றி பார்ப்போம்....
Einstein சொன்னார்
“The True Purpose of Education is to Train the Mind to Think .
Facts and Data can be Looked up in the text Books.”
எத்தனை அர்த்தமுள்ள சொற்கள்!! ஆனால் நம் கல்வி முறையோ இதற்கு ஏறுமாறாக இருக்கிறது ! LKG இலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரை மூளைக்கு நம் கல்வித்துறை பெரிய பாரத்தை தந்ததாகத் தெரியவில்லை. எல்லா பாடங்களுக்கும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு,ஒவ்வொரு Chapterஇன் முதுகிலும் கேள்வி வங்கி ஒட்டப்பட்டிருக்க மாணவரின் வேலை புத்தகத்தின் சொற்கள் அனைத்தையும் மூளையில் ஏற்றிக்கொள்வதே! இதை சிலர் எளிதாக செய்கின்றனர்,சிலர் கடினப்பட்டு செய்கின்றனர்,சிலர் செய்வதில்லை.இதன் மூன்றினாலும் ஒரு பயனுமில்லை.மூன்று தரப்பினரும் புத்தியை தீட்டி எதையும் செய்ததாகத் தெரியவில்லை. இருக்கிறார்கள்...ஆசிரியரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் மாணவரும் நம் மனதைத் தேற்ற இருக்கிறார்கள்.ஆயினும் அவர்களின் எண்ணிகை ஐந்தோ ஆறோ சதவிகிதத்தைக் கூடத் தொடாது. பன்னிரெண்டாம் வகுப்பு வந்ததும் அதுவரை பத்தி பத்தியாக மனப்பாடம் செய்வதற்கே பயன்படுத்தி வந்த மூளையை திடீரென "யோசி....யோசி.." என சீத்தலை சாத்தனார் range இற்கு குடைந்தால் எப்படி.Entrace Exams ஐப்பற்றிக் கூறுகிறேன்.
என்னைப் பொறுத்த மட்டில் நுழைவுத்தேர்வுகள் மாணவர் எதிர்காலத்திற்கு மிகவும் இன்றியமையாதவை.அரசியல் வாதிகளின் சந்தர்ப்பவாத பேச்சினால் அனைவரும் இந்த அப்பாவி நுழைவுத்தேர்வின் மீது அர்த்தமற்ற கோவம் கொண்டுள்ளார்கள். ஒன்றை கவனித்தீர்களா? இது சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தை அடையும் போதெல்லாம் வெற்றி இதன் பக்கமே இருக்கும்.ஏனெனில் எல்லோரையும் போல் நீதிமன்றங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிடுவதில்லை.
சரி இவ்வளவு சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கும் நுழைவுத்தேர்வின் அமைப்பை கவனிப்போம் ! நுழைவுத்தேர்வு வினாக்கள் வேற்று உலகத்திலிருந்து திரட்டப்படுவதில்லை. மாணவர் ஒரு வருடமாக திகட்ட திகட்டப் படித்த அதே பாடங்களிலிருந்து தான்.இதற்கு ஒரு சின்ன விளக்கம் தருகிறேன்.....
ஒரு ஐந்தாறு வயது சிறுவனுக்கு மணி பார்க்கக் கற்றுத்தந்து கொண்டிருக்கிறோம்.முதலில் Basicஆக சில விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறோம் (இப்ப 'ரெண்டு' பக்கத்தில பெரிய முள் இருந்துதுன்னா ரெண்டு இன்டு அஞ்சு = பத்து.....).பிறகு நாமே ஒரு timingஐ கடிகாரத்தில் அமைத்துவிட்டு எப்படி மணியை சரியாய் கணிப்பது என சில சான்றுகள் மூலம் விளக்குகிறோம். இப்போது அந்த குழந்தை நாம் கற்றுத்தந்ததை சரியாய் கற்றுக்கொண்டுள்ளதா என்பதை அறிய நீங்கள் ஒரு தேர்வு வைக்கிறீர்கள்.ஏற்கெனவே அமைத்த மணியை திருப்பிக் காண்பித்தால் அது பொதுத் தேர்வு (சத்தியமாய் இதை நீங்கள் செய்ய மாட்டீர்கள்). இதுவரை அந்த சிறுவன் கண்டிராத வேறு ஒரு timingஐ காட்டி மணியை கணிக்கச் சொன்னால் அது நுழைவுத்தேர்வு.இவ்வளவே!
இதற்குத்தான் இவ்வளவு வழக்குகள்,கூச்சல் குழப்பம் எல்லாம்! நுழைவுத்தேர்வு வினாக்கள் கடினமாக உள்ளதை நாம் மறுக்க முடியாது. ஏன் கடினமாக உள்ளது என யோசித்து பார்த்தால், பிழை நம் பக்கமிருப்பதை உணரலாம். சிறு வயதிலேயே மாணவர்களுக்கு radicalஆக யோசிக்க கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். இப்போது ஒரு தேர்வு அவர்களின் அறியாமையை வெளிச்சம்போட்டு காண்பிக்கிறதென்றால் அந்த தேர்வை இரத்து செய்வது என்பது முட்டள்தனம். அரசிற்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்மையாகவே மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், அவர்கள் கல்வித்தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும்.அறிவியல் நிகழ்வுகளை மாணவர்கள் எளிமையாகவும் தீர்கமாகவும் உணரும் வகையில் சொல்லித்தரும் ஆசிரியர்களை அமர்த்த வேன்டும். இன்றைக்கு அவர்கள் இந்த தேர்வை நிறுத்தி விடலாம். நான்கு வருடத்திற்குப் பின் மாணவர்களை Recruit செய்ய வரும் கம்பெனிகள் கேட்கும் கேள்விகள் நுழைவுத்தேர்வை விட கடினமானவை. சட்டென சிந்தித்து ஒரு Problemஇற்கு விடை காண வேன்டும்.அத்தகைய பரீட்சைகளுக்கு நுழைவுத்தேர்வு ஒரு முன்னோடியாக அமையும்.(கம்பெனிகளிடம் "நீங்கள் எளிதாகத்தான் கேள்விகளை அமைக்க வேன்டும் என இதே அரசியல்வாதிகள் வாதடுவார்களா?). ஏன் நான்கு வருடங்கள் தள்ளிப் போக வேண்டும்? கல்லூரி முதல் வருடத்திலேயே என்னைப்போன்ற மாணவர்களை இம்சிக்க Engg-Drawing , Engg-Mechanics ஆகியவை காத்துக்கொண்டிருக்கின்றன.ஒரு பிரமிடை நம் பார்வைப் பாதையிலிருந்து முப்பது டிகிரி inclination இல் வைத்து பார்த்தால் அது எப்படித்தோன்றும் என்ற range இற்குத்தான் எல்லா கேள்விகளும் இருக்கும். இவ்வகையான கேள்விகளுக்கு பதிலளிக்க மூளையில்லுள்ள Gyri,Sulci களை உசுப்பேத்திவிட்டு,எல்லா எண்ண அலைகளையும் Polarise செய்தால் தான் விடை எங்கோ புகை மூட்டமாய் இருப்பது போலத்தெரியும். நானும் அவதிப்பட்டிருக்கிறேன்.(எப்படியோ தத்தித் தேவி பாசாகிவிட்டேன் என்பது வேறு விஷயம்!). அதனால் தானே இதைப்பற்றி எல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.( இல்லை என்றாலும் " ரகு சந்தோஷமாய் காப்பியை உறிஞ்சிக்கொண்டிருந்தான் அது தான் அவன் குடிக்கும் கடைசி கப் என்று அறியாமல்..." என்று எதாவது ஒரு கதையை blog செய்து, "வந்து படியுங்கள்" என்று நச்சரித்திருப்பேன் )
இதுவே Entrance போன்ற தேர்வுகளை பள்ளிக் காலங்களிலேயே அவ்வப்போது நடத்திக்கொண்டிருந்தால், இப்போது மணவர்களை வாய் பிளக்க வைக்கும் தேர்வுகள் வாய் பிளக்க ஆரம்பித்துவிடும்!
Software மட்டுமல்ல Automobile,Electronics,Nanotechnology என பல துறைகளும் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அரசு நுழைவுத்தேர்வு போன்ற தேர்வுகளை எட்டாம் வகுப்பிலிருந்தே தொடங்க வேண்டும்.அதை நிறுத்துவதைப் பற்றிப் பேசக்கூடாது! இளைஞர்கள் அரசியலில் கால் பதிக்கத் தொடங்கிவிட்டர்கள் ( சில IIT மற்றும் MBA மாணவர்கள் சேர்ந்து Lok Paritran என்னும் கட்சியை தொடங்கியிருக்கின்றனர் ).Scenario மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வளவு நேரம் கவனம் பிசகாமல் பொறுமையுடன் படித்த உங்களுக்கு நன்றி ! Da Vinci இன் One Liner உடன் உங்கள் கண்களுக்கு விடுதலை தந்துவிடுகிறேன்!
“OPEN THE EYES….. You WRETCHED MORTALS”

.jpg)

11 Comments:
the essay is well written...the light elements inserted in between the heavy ones provide a framework of contrast..keep it up!
Ganesh,
The Essay is Excellent!You have a great future as a writer.
Proud to be your friend
Wow.Marvelous posting Gan.Keep writing.
Ganesh
Your writing is very mature.I dont think that even your thala Sujatha would have written like this at your age.
Congrats to tamil for getting a good writer like you!
Yes Ganesh,your views are right.
To compete with the developments taking place all ver the globe,we can't sit idle.Those exams which induce lateral thinking in the students must be held continuously.We must not talk of quashing them.
Mani
No dont compare me with the veteran.His writings are unparallelled.Read his novels and understand relativity.
என் பக்கத்து வீட்டுப் பையனுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தேன். ஒரு 100மீட்டர் x 100 மீட்டர் நீச்சல் குளம், அதைச் சுற்றி 2 மீட்டர் அகலத்துக்கு ஒரு பாதை. பாதையின் பரப்பளவைக் கண்டுபிடிப்பதுதான் கணக்கு.
அது எப்படி என்பது உங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.
பரீட்சை முடிந்ததும் பையன் நீள மூஞ்சியுடன் என்னிடம் வந்து கடினமானக் கணக்கு கொடுத்து விட்டார்கள் என மூக்கால் அழுதான். ஏனெனில் நீச்சல் குளத்துக்குப் பதிலாக சதுரப் பூங்காவையும், அதை சுற்றிப் பாதையையும் கொடுத்தார்களாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Thanks Thampi.
Hey Junior..!!
I am a 2000 grauduate in Instrumentation from MIT, also a big fan of Sujatha. Welcome to the Tamil blog field. All the best.
hello Ganesh,It is such profound words that make blogs worthwhile. you are way beyond your age. why "auto ganesh"? with best wishes.Manu
Post a Comment
<< Home