Welcome Friends!!

Hi.This Is Ganesh From MIT Chromepet,Chennai.Iam doing My First year B.E in Automobile.Iam a Great Fan of Writer Sujatha and Occasionally Try My Hand in Writing Thamizh Stories and Haikus.

My Photo
Name:
Location: Chennai, Tamil Nadu, India

Read my blog. What does it suggest?

Wednesday, February 22, 2006

ஒரு குட்டிக்கதை

அந்த conference hallஇல் இனி ஒரு வஸ்துவுக்கும் இடம் இல்லை.பல நாடுகளிலிருந்து வந்திருந்த தொல்பொருள் ஆய்வாளர்களாலும் விஞ்ஞானிகளாலும் நிரம்பி வழியும் நிலையில் இருந்தது.Zurich இல் நடைபெற்ற அந்த Conferenceஐ உலகமே Live Relayஇல் பார்துக்கொன்டிருந்தது.உட்கார இடம் கிடைக்காத ஒரு நமீபிய தொல் பொருள் ஆய்வாளன் Podium அருகில் நின்று கொண்டது தான் பரிதாபம்.இத்தனை பரபரப்பும் எதற்கு?ஆய்வாளர்கள் பிரித்து எடுத்த - பல்லாயிரம் ஆண்டுகட்களுக்கு முன்னால் மனிதன் பெரிதும் உபயோகப்படுத்திய - ஒரு பொருளை இந்த கருத்தரங்கில் அறிமுகப்படுத்துவதற்குத்தான்.இதன் மூலம் மனிதனின் அன்றைய வாழ்க்கை முறையையும் அவனின் உடலில் இருந்த வேதியியல் பொருட்களையும் கணித்து சில சிக்கலான Evolutionary மாற்றங்களை புரிந்து கொள்ளவும் இக்கண்டுபிடிப்பு நிச்சயம் உதவும் என அவர்கள் நம்பினர்.அந்த கருத்தரங்கு மாளிகையை விவரிக்க வேண்டாமா? அறை முழுவதும் ஆங்காங்கே சுவருக்குள் பொருத்தப்பட்ட X-Ray வசதி கொண்ட DigiCamகள் எல்லா நபர்களையும் ஸ்வாரஸ்யம் குறையாமல் திரும்ப திரும்ப ஆராய்ந்து கொன்டிருந்தது.சுவர்களில் இடத்திற்கேற்ப Reverberation time adjusting வசதி கொண்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.எல்லா விஞ்ஞானிகளுக்கும் Virtual Bullet Proof உடைகள் அணிவிக்கப்பட்டு அவர்கள் ஆஜானுபாகுவாக காபியை உறிஞ்ஜிக் கொன்டிருக்க அறையில் பரவிய திடீர் அமைதி Chief இன் வரவை அறிவித்தது.அவருக்கென அமைக்கப்பட்ட தனி நுழைவாயில் மூலம் Helipad இல் வந்து இறங்கினார்.
அவரைப் பார்த்ததும் 'விர்ர்'ரென அனைவர் உள்ளும் ஒரு விறைப்பு ஊர்ந்து சென்றது .அவருக்கு அத்தகைய உயரிய பதவி வழங்கப்பட்டதற்கான காரணத்தை அவரது உடற்கட்டே விவரித்தது.சிறிது நேரத்தில் ஒரு ஹைடெக் பெட்டி போடியம் நடுவில் கொன்டு வந்து வைக்கப் பட்டு அவசர அவசரமாய் அந்த ஏரியாவிற்கு மட்டும் தனி தட்ப வெட்ப நிலை உருவக்கப் பட்டது.மூன்று நபர்கள் தடிமனான உடைகள் அணிந்து கொண்டு வந்து வியர்வை சிந்த ஒரு கண்ணாடி ஜாரை அந்த ஹைடெக் பெட்டியிலிருந்து எடுத்து Chief இன் முன் வைக்க அந்த மைக்ரோ வினாடி பல நூறு கேமராக்கள் அதனைப் பார்த்து கண்சிமிட்டி பளிச்சிட அதற்கு வெட்கம் வந்திருக்கும்.கண்ணாடி குப்பியிலிருந்த தெளிந்த திரவத்தை Amplifier Screenஇல் பார்த்த எல்லோரும் பிரமிப்பின் பிடியில் சிக்கி விலக சிறிது நேரம் பிடித்தது.சில நிமிடஙள் Chief தன் சகாக்களிடம் ஏதோ கிசு கிசுத்துவிட்டு இறுதியில் எழுந்து போடியம் நடுவிற்கு மிதந்து வந்தார்.ஒரு அரை மில்லி மீட்டர் மைக்கை தன் கோட்டில் ஒட்ட வைத்துக் கொண்டு அவர் பேசியது,அந்த அறையில் இருந்த ஐம்பத்து நாலு மைக்ரோ ஸ்பீக்கர்க்ளிலும் - ஜானிற்கு English இலும் சாடெர்ஜிக்கு Hindiஇலும் யாங்சாஙிற்கு Mandarinஇலும் - 'எக்கோ'யித்தது.கருத்தரங்கிற்கு சென்றிருந்த தமிழரசன்,(CAO,South India) காதுகளில் விழுந்த சொற்கள் யாதெனில்... "சகோதரர்களே..இதோ நம் முன் நடனமாடிக்கொண்டிருக்கும் இந்த தெளிந்த திரவத்தை நம் தொல்பொருள் ஆய்வாளர்கள் அன்டார்டிகாவில் தனித்தனி சிதறல்களாய் கண்டெடுத்து CQD தொழில் நுட்பம் வாயிலாக பிரித்தெடுத்து ஒன்றிணைத்து நம் முன் காண்பித்திருக்கிறார்கள்.இப்போதைக்கு கிடைத்த ஆய்வுக் குழுவின் கருதுப்படி இதனை நம் முன்னோர்கள் குடிக்கவும் உடைகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்தினார்கள் எனத் தெரிகிறது...."அறை சில வினாடிகளுக்கு சிரிப்பலைகளில் சிக்கித் திணறியது."...Hydrogen மற்றும் Oxygen இன் பிரமிக்கத்தக்க பிணைப்பால் இந்த திரவம் உருவாகியிருக்கிறது.இதை நம் முன்னோர்.....", என்று எதிர்பாராமல் நிறுத்தி மறுபடியும் தன் notesகளை சரிபார்த்துக்கொண்டு "ஆங்..இதை நம் முன்னோர்கள் தண்ணீர் என அழைத்தனர்.இக்கண்டுபிடிப்பை பற்றி மேற்கொண்டு ஆரய்வதின் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் !!.இதுவே இந்த மூவாயிரத்து அறனூற்றி எழுபத்து மூன்றாம் ஆண்டின்(3673) சிறந்த தொல்பொருள் கண்டுபிடிப்பு எனக் கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.மேலும்....."

பி.கு: இக்கதை 3700 ஆன்டுகளை சுற்றி சுழல்வதால் பல ஆங்கில பிரயோகங்களை நீங்கள் காணலாம்.கதையின் ஒட்டத்திற்கு இவை இன்றியமையாதவை.தமிழ் ஆர்வலர்கள் இதனை படிக்க நேர்ந்தால் மன்னிக்கவும்!!

Saturday, February 18, 2006

Hykoo Section:

These are the hykoos I have written.I hope you will like them.I dont know whether any of these had already been written.Please read them carefully .Your valuable comments and advices will be greatfully appreciated!

1. பெய்யும் மழைக்கு
கறுப்புக் குடை வறவேற்பு - குடை
(This Hykoo was published in AV by Writer Sujatha sir as one of the best two hykoos of 2005.)

2. நீன்டு செல்லும்
குப்பை கூளமாய் -
ரயில் தண்டவாளம்

3. எண்ண அலைகளின்
தொடர் இரைச்சல்-
மொளனம்

4. அரை க்ராம் நகத்தை
தானம் கொடுத்து
கவிதை வடிக்கும் -
விரல்

5. நிலத்திற்கு இட்டுச்
சென்றவரை இடுகாட்டிற்கு
இட்டுச் செல்லும் -
மின்சாரம்

6. திறக்கப் பட்ட
ஏட்டின் பறிக்கப்பட்ட
காகித முத்தங்கள்

7. கடற்கரையில் தொடர்ந்து
காணலாம் அலைகளின்
ஓட்டப்பந்தயத்தை

8. பொங்கல் வாழ்த்து
பகிர்ந்து கொள்ளும்-
செல் ஃபோன்கள்

9. சிந்தைகள் எல்லாம்
பின்னே....
சாலையில் முழுக்க
குன்டுக் கற்கள்

10. கனவுத் திரையில்
திடீர் வில்லன் -
விழிப்பு